சாமிநாதன் இரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நகைச்சுவைக் க்கலைஞர் அச்சப்பன் காலமானார். அவருக்கு வயது 63.
சிறுநீரகக் கோளாறினால் இன்று அதிகாலை 2.43 மணியளவில் அவர் காலமானதாக அவரின் மகள் யுவனேஸ்வரி தெரிவித்தார். அச்சப்பனின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் சிலாங்கூர், தாமான் பூச்சோங் லாமாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
அச்சப்பன், ‘80ஆம் ஆண்டுகளில் மலாய் நாடகங்கள், திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். “Santan Berlada”, “Pi Mai Pi Mai Tang Tu” போன்ற தொலைக்காட்சி நாடகங்களில் அவரின் நடிப்பு வெகுவாக இரசிக்கப்பட்டது.