பெர்சத்துவுடன் இணைவது பற்றி பேசுவதற்கு அம்னோ தலைவர்கள், அதன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி உட்பட, பெர்சத்துவின் தலைவர் டாக்டர் மகாதிரை சந்தித்துளளனர் என்று பேசப்படுவதாக எ. காடிர் ஜாசின் கூறுகிறார்.
இப்போதெல்லாம் அவர்கள் அம்னோ பற்றி பேசுவதில்லை. பெகெம்பார் பற்றி பேசுகிறார்கள். அது அம்னோவின் மலாய் பெயரின் சுருக்கம்.
இப்போது பேசப்படுவது, பெகெம்பார் பெர்சத்துவுடன் சேர்ந்து பெகெம்பார் பெர்சத்து அமைக்கும் சாத்தியம் பற்றிதான். அதன் வழி அவர்கள் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் ஓர் அங்கமாகலாம் என்று நம்புகிறார்கள் என்று கூறுகிறார் காடிர்.
இதுதான் நான் கேள்விப்பட்டது. இதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால், ஹரப்பானின் ஓர் அங்கமாக இருக்கும் பெர்சத்து இந்த அம்னோ/பெகெம்பார் அமைப்பில் இணைய விரும்புமா அல்லது முடியுமா என்று தனிப்பட்ட முறையில் அவரது வலைத்தளத்தில் காடிர் எழுதியுள்ளார்.
பிரதமரின் ஊடக விவகார சிறப்பு ஆலோசகரும் பெர்சத்து உச்சமன்ற உறுப்பினருமான காடிர், இது அம்னோவின் சூழ்ச்சி என்பது கட்சிக்குத் தெரியும் என்றார்.
இந்த விவகாரத்தில் பெர்சத்துவின் நிலைப்பாடு தெளிவானது என்றாரவர்.
பெர்சத்துவில் சேர அம்னோ உறுப்பினர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட முறையில் வர வேண்டும். அவர்கள் ஒரு தொகுதியாகவோ கிளையாகவோ சேர முடியாது என்று அவர் மேலும் கூறினார்.