அஸ்மின்: சாபா கிழக்குக் கரைக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை

சாபாவின் கிழக்குக் கரையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைப்பான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்கிறார் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி.

அண்மையில் அங்கு நிகழ்ந்த ஆள்கடத்தல் சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு மருட்டலாக அமைவதுடன் அம்மாநில பொருளாதார மேம்பாட்டுக்கும் தடங்கலாக விளங்குகிறது என அஸ்மின் கூறினார்.

“இன்ஷா அல்லாஹ், இது குறித்து, உள்துறை அமைச்சு உள்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விவாதிப்பேன்.

“அமைதியாகவும் வளப்பமாகவும் வாழும் உரிமை சாபா மக்களுக்கு உண்டு”. நேற்றிரவு பெனாம்பாங்கில், மலேசிய தினக் கொண்டாட்டங்களை ஒட்டி நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்துகொண்ட அஸ்மின் இவ்வாறு கூறினார்.