கெராக்கான் தலைவர் மா சியு கியோங் உடனடியாக பதவி விலகுவதாக அறிவித்தார்.
மா, இன்று காலை கட்சியின் நெகிரி செம்பிலான் மாநிலப் பேராளர் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று பெர்னாமா கூறியது. அதுவே கெராக்கான் தலைவர் என்ற முறையில் அவர் கலந்துகொண்ட இறுதி நிகழ்ச்சியாக அமைந்தது.
“மூன்று, நான்கு மாதங்களாகவே கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தலைவராக இருக்குமாறுதான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
“ஆனால், கேப்டன் என்ற முறையில் (14வது பொதுத் தேர்தலில்) கட்சியின் அடைவுநிலை முன்னைவிட மோசமாக இருந்தால் பதவி விலகுவேன் என்று ஏற்கனவே வாக்குக் கொடுத்திருக்கிறேன்.
“எல்லாருக்கும் (கட்சி உறுப்பினர்களுக்கு) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி நான் கெராக்கான் தலைவராக இருக்கப் போவதில்லை என்பதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கொள்கிறேன்”, என்றவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.