பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு “முடிசூட்டு விழா” நடத்தப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்று கூறிய முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், அதற்காக போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட வேண்டும் என்பதை அவர் இன்று வலியுறுத்தினார்.
அம்னோ-பிஎன் போட்டியிட வேண்டும். போர்ட்டிக்சன் வெற்றிபெறக்கூடிய இருக்கையல்ல, ஆனால் நாம் இந்த நாணமற்ற அரசியல் பட்டம் சூட்டுதலை எதிர்க்க வேண்டும் என்றாரவர்.
முடிசூட்டு விழாக்கள் மன்னர்களுக்கு. ஆனால் அன்வார் மன்னரல்ல என்று கைரி டிவிட்டர் செய்துள்ளார்.
போர்ட்டிக்சன் தொகுதியில் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்காக அத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா பதவி விலகியுள்ளார்.
எதிரணியினர் அத்தொகுதியை அன்வாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹருன் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய கைரி இவ்வாறு கூறினார்.
மஇகாவிற்கு அன்வாரை எதிர்த்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று மஇகா தலைவர் எஸ்எ விக்னேஸ்வரன் கூறிவிட்டார்.