பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், அம்னோவிலிருந்து விலக முஸ்தபா முகம்மட் செய்த முடிவு அக்கட்சியின் அழிவின் தொடக்கத்தைக் குறிப்பதாக வருணித்தார்.
அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான முஸ்தபா தாம் மதிக்கும் அம்னோ தலைவர்களில் ஒருவர் என்றாரவர்.
“இன்றும்கூட அவரை மதிக்கிறேன் ஏனென்றால் அவர் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர், நாட்டுக்கு அவர் செய்துள்ள சேவைகளையும் பங்களிப்பையும் மறுக்கவியலாது.
“அவர் அம்னோவிலிருந்து விலகுவதாகக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அம்னோவின் கதை முடிந்தது என்று நினைக்கிறேன்…….நேர்மையாகக் கூற வேண்டுமெனில் அவரைப் போன்ற ஒருவரின் இழப்பு அம்னோவுக்குப் பேரிழப்பாகும்”, என்று சைட் சாதிக் கூறினார்.