ஜெலி எம்பி முஸ்தபா முகம்மட் அம்னோவிலிருந்து விலகிய 24 மணி நேரத்தில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமானும் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
அதன் விளைவாக மக்களவையில் அம்னோவின் எம்பிகள் எண்ணிக்கை 49 ஆகக் குறைந்துள்ளது. இதனால் 50 எம்பிகளைக் கொண்டுள்ள பிகேஆர் இப்போது மக்களவையில் பெரிய கட்சி ஆகியுள்ளது.
அனிபா கட்சியிலிருந்து விலகியதை உறுதிப்படுத்திய அவரின் உதவியாளர் விரைவில் ஓர் அறிக்கை வெளியிடப்படும் என்றார். அனிபா கிமானிஸ் எம்பி ஆவார்.
அனிபாவுக்கும் முஸ்தபாவுக்கும் முன்னதாக மூன்று எம்பிகள் அம்னோவிலிருந்து விலகினர். மஸ்ஜிட் தானா எம்பி மாஸ் எமியாத்தி சம்சுடின், புக்கிட் கந்தாங் எம்பி சைட் அபு ஹுசேன் ஹவிஸ் சைட் அப்துல் பைசல், பாகான் செராய் எம்பி நூர் அஸ்மி கசாலி ஆகியோரே அம்மூவருமாவர்.
மேலும் பல அம்னோ எம்பிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.