ஹிசாம் இனத்தின், நாட்டின் எதிர்காலம் பற்றி பேச மகாதிரை சந்தித்தாராம்

 

அம்னோவின் உதவித் தலைவார் ஹிசாமுடின் ஹூசேன் நேற்று புத்ரா ஜெயாவில் பிரதமர் மகாதிரை சந்தித்ததை உறுதிப்படுத்தினார்.

என்எஸ்டி செய்திப்படி, முன்னாள் தற்காப்பு அமைச்சரின் சிறப்பு அதிகாரி அந்தச் சந்திப்பு “(மலாய்) இனத்தின் மற்றும் நாட்டின் எதிர்காலம்” பற்றிய மகாதிரின் திட்டம் என்ன என்று தெரிந்து கொள்வதுதான்…”அவ்வளவுதான்” என்று கூறினார்.

அந்தச் சந்திப்பு பற்றிய செய்தி ஹிசாமுடினும் இதர முன்னாள் அமைச்சர்களான முஸ்தாபா முகமெட் மற்றும் அனிபா அமான் ஆகியோருடன் சேர்ந்து அம்னோவை விட்டு விலகக்கூடும் என்ற ஊகத்தைப் பரப்பியது.

தமது தாத்தா ஓன் பின் ஜாபாரால் நிறுவப்பட்ட, தமது தந்தை நான்காவது தலைவராக இருந்த அம்னோவை விட்டு விலக தமக்கு எந்தக் காரணமும் இல்லை என்று ஹிசாம் கூறியதாக என்எஸ்டி கூறுகிறது.

நான் அம்னோவை விட்டு விலகுவதற்கு காரணம் ஏதும் இல்லை, ஆனால் தலைமைத்துவம் அனைத்து அம்னோ உறுப்பினர்களுக்கும் தெளிவான வழி காட்ட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.