அக்டோபர் 13-இல், போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் நடைபெறும். அதற்கான வேட்பாளர் நியமனம் செப்டெம்பர் 29 இல் நடைபெறும். தேர்தல் பரப்புரைக்கு 14 நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கு ரிம3.6 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
இந்த இடைத் தேர்தலில் 75,770 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் 70 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்று நம்புவதாகக் கூறிய தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் ஓத்மான் மாமுட், வாக்காளர்கள் அவர்களுடையக் கடமையை ஆற்றுவதற்கு அவர்களைத் தூண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
போர்ட்டிக்சன் தொக்குதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதுவரையில் முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும் போட்டியிடுவதற்கான முனைப்பைக் காட்டவில்லை.