நஜிப்புக்கு 3.5 மில்லியன் பிணை, நீதிமன்றம் அறிவித்தது

கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசூரா அல்வி, 3.5 மில்லியன் ரிங்கிட் பிணையில், முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக்கிற்கு ஜாமீன் வழங்கினார்.

இன்று, 4 ஊழல் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட 1எம்டிபி தொடர்பிலான RM2.6 பில்லியன் சம்பந்தப்பட்ட 21 மோசடி வழக்குகளை நஜிப் எதிர்கொண்டார்.

எல்லாக் குற்றச்சாட்டுக்களிலும் தான் குற்றவாளியல்ல என நஜிப் கூறியுள்ளார்.