சிஐஎம்பி வங்கி தலைவர் நஸிர் ரசாக் ஆண்டு இறுதியில் பதவிலிருந்து விலகுகிறார்

 

மலேசியாவின் இரண்டாவது பெரிய வங்கியான சிஐஎம்பி ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைவர் நாஸிர் அப்துல் ரசாக், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் சகோதரர், இந்த ஆண்டு இறுதியில் பதவி துறக்கிறார் என்று இன்று அறிவித்தது.

2014 ஆம் ஆண்டிலிருந்து நஸிர் சிஐஎம்பியின் தலைவராக இருந்து வருகிறார். அவ்வங்கியில் 29 ஆண்டுகாலமாக பணி புரிந்துள்ளார், அதில் அவர் 15 ஆண்டுகளாக தலைமை அதிகாரியாக இருந்து வருவதும் அடங்கும்.

அடுத்தத் தலைவர் யார் என்பதையும் பதவி மாற்றத்திற்கான சரியான தேதி எது என்பதும் பின்னர் அறிவிக்கப்படும் என்று சிஐஎம்பி கூறியது.