ஹாலிவுட் படங்கள் தயாரிப்பில், 1எம்டிபி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, முன்னாள் பிரதமரின் மனைவி, ரோஸ்மா மன்சோரின் மகன் ரிஸா அசீஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
ரிஸா, 41, இன்று காலை 9.30 மணியளவில், ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) கட்டடத்தில் இருந்ததாக சீனார் ஹரியான் செய்திகள் கூறுகின்றன.
ரெட் கிரானைட் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான ரிஸா-ஐ, நான்காவது முறையாக எம்ஏசிசி அழைத்துள்ளது.