டாக்டர் சுவா சொய் லெக் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக அவருக்கு அணுக்கமான வட்டாரமொன்று தெரிவித்தது.
2013-இலிருந்து அரசியலைவீட்டு விலகி இருக்கும் அவர் மீண்டும் அரசியலுக்குத் திரும்பி வரப்போகிறார் என்று கடந்த சில மாதங்களாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.
சுவா தம் முடிவை நாளை செய்தியாளர் கூட்டமொன்றில் அறிவிப்பார் என்று அவ்வட்டாரம் கூறியது.
“தம் முடிவுக்கான காரணத்தையும் இப்போதைய மசீச குறித்து தம் எண்ணங்களையும் அவர் எடுத்துரைப்பார்”, என அவ்வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.