ஜோகூரில் 2013 -க்கும் கடந்த ஆண்டு மே மாதத்துக்குமிடையில் 3,424 குடும்ப வன்செயல்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் அம்மாநிலம் குடும்ப வன்செயல்கள் அதிகம் நிகழும் மாநிலங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடம் 4,064 குடும்ப வன்செயல்களைப் பதிவுசெய்துள்ள சிலாங்கூருக்கு.
இதைத் தெரிவித்த ஜோகூர் மாநில மகளிர், சுற்றுலா மெம்பாட்டுக்குழுத் தலைவர் லியோ சாய் துங், போலீஸ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி “கருத்துவேறுபாடு”தான் குடும்ப வன்முறைக்குப் பெரிதும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறினார்.
“இவ்வாண்டு ஜனவரியிலிருந்து மே வரை 2276 குடும்ப வன்செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 26க்கும் 35 வயதுக்குமிடைப்பட்டவர்களே அதிகம் சம்பந்தப்பட்டிருந்தனர்”, என்றவர் ஜோகூர் பாருவில் கூறினார். லியோ மகளிருக்கு எதிரான வன்முறைக்கு முடிவுகட்டுதல் மீதான கருத்தரங்கை முடித்து வைத்துப் பேசினார்.