பிஎன் நிழல் அமைச்சரவையில் நஜிப் ஏன் இல்லை?

இன்று, 50 பேர் கொண்ட ஒரு நிழல் அமைச்சரவையைப் பிஎன் அறிவித்தது.

இருப்பினும், சேவை செயற்குழு (ஜே.கே.பி.) என அறியப்படும் அக்குழுவில், முன்னாள் பிரதமர் நஜிப் ரஷாக் இடம்பெறவில்லை.

அக்குழுவில், நஜிப் நியமிக்கப்படாதது குறித்து, அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசாவிடம் கேட்டபோது, அந்தப் பெக்கான் எம்பி அதில் இடம்பெற தேவை ஏற்படவில்லை எனக் கூறினார்.

“இந்த நிழல் அமைச்சரவையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவரே தெரிவித்துள்ளார்,” என அனுவார் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில், அம்னோ தலைமையகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அனுவார் இதனைத் தெரிவித்தார்.

மே 9-ல், 14-வது பொதுத் தேர்தல் முடிந்த மூன்று நாட்களுக்குப் பின்னர், நஜிப் அம்னோ மற்றும் பிஎன் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.