மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குத் திரும்ப எண்ணம் கொண்டிருக்கும் அம்னோ, அதற்காக பக்கத்தான் ஹரப்பான் கட்சிகளில் “ஏதாவது ஒன்று”டன் சேர்ந்து “ஒற்றுமை அரசாங்கம்” அமைக்கத் தயாராக உள்ளது. இதை அதன் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியே கூறியுள்ளார்.
“அன்வார் இப்ராகிம் பிரதமராவதற்கு முன்னரோ பின்னரோ, ஒற்றுமை அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார்.
“ஆனால், அது விரைவில் நடந்தால் நல்லது”, என ஹமிடி கூறியதாக இன்று ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது.
போர்ட் டிக்சன் இடைத் தேர்தலை பிஎன் புறக்கணித்தற்கும் அக்கட்சி பிகேஆர் அல்லது பெர்சத்துவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க முயல்வதாகக் கூறப்படுவதற்கும் தொடர்புண்டா என்று கேட்டதற்கு ஹமிடி அவ்வாறு குறிப்பிட்டார் என அச்செய்தி கூறிற்று.