பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அம்னோ இடையிலான ஒற்றுமை அரசாங்கம் பொருத்தமற்றது என்று பி.கே.ஆர். பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“இதுபோன்ற முன்மொழிவு எதுவும் இல்லை, எனவே இதுபற்றி விவாதிப்பது பொருந்தாது என்று நான் நினைக்கிறேன்.
“இது பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் நாங்கள் அதைப் பற்றி விவாதிக்கவில்லை,” என்று அன்வார் நிருபர்களிடம் கூறினார்.
அம்னோ தேசியத் தலைவர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஹராப்பானின் எந்தக் கட்சியுடனும் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அம்னோ திறந்திருப்பதாக கூறியுள்ளது தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.