இளைஞர்களும் பெண்களும் வர்த்தகக் கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும், வேதமூர்த்தி

மலேசிய இந்தியர்கள் உள்நாட்டில் கிடைக்கின்ற வர்த்தக வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் பன்னாட்டு வர்த்தகச் சந்தையிலும் ஊடுறுவ வேண்டும். குறிப்பாக இளந்தொழில் முனைவர்கள் வர்த்தகக் கட்டமைப்பை விரிவுப்படுத்த வேண்டும் என்று தேசிய ஒற்றுமை-சமூக நல அமைச்சர் வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், ஆசிய-பசிபிக் தொழில்நுட்ப-புத்தாக்கப் பல்கலைக்கழகத்தில்  நடைபெற்ற மலேசிய இந்தியர் எண்ணியல் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியபோது, பிரதமர் துறை அமைச்சருமான வேதமூர்த்தி, இன்றைய வர்த்தக உலகம் மிகவும் சிறுத்துவிட்டது. உலக மயம் என்னும் புதிய தாக்கத்தினால் இது நடக்கவில்லை; மாறாக, தொழில்நுட்ப வளர்ச்சியின் அதிரடித் தாக்கத்தால் இன்றைய வணிக உலகம் மிகவும் சிறியதாகி விட்டதென்றார்.

மலேசிய இந்தியர்கள் தங்களின் வர்த்தக தொழிழ்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ள இதுபோன்ற மாநாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை புரியும் என்பதால் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டுவதாக அமைச்சர் கூறினார்.

எண்ணியல் வர்த்தக தொழில்நுட்பத்தைக் காட்டிலும் மின்னியல் வர்த்தகப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு அம்சம் சற்று அதிகம். எது எவ்வாறாயினும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுத்தும் மலேசிய இந்தியர்கள் எண்ணியல், மின்னியல் சார்ந்த வர்த்தகத்தில் நாட்டம் கொள்ள வேண்டும்.

மலேசிய அரசாங்கமும் மின்னியல் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் எண்ணியல் அற்ற வர்த்தகக் கட்டமைப்பை(DFTZ) கடந்த 2017இல் அறிமுகப்படுத்தியது. இதன்வழி, ஏறக்குறைய 60,000 வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் 38 பில்லியன் டாலர் அளவுக்கு சிறு-நடுத்தர தொ2ழில்களின் மூலம் ஏற்றமதி செய்ய முடியும் என்றும் அரச இலக்கு நிர்ணயித்துள்ளது.

இளைஞர்களும் பெண்களும் வர்த்தகத்தில் குறிப்பாக இணைய வர்த்தகத்தில் அதிகமாக ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அமைச்சர், மலேசிய இந்தியர்களின் வர்த்தகக் கட்டமைப்பு இன்னும் விரிவடைந்தால் அது சமுதாயத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது என்றார்.
  • நக்கீரன்