‘1எம்டிபி- தி ஸ்கேண்டல் தாட் புரோட் டாவுன் எ கவர்மெண்ட்’ (1எம்டிபி – ஓர் அரசாங்கத்தைக் கவிழ்த்த ஊழல்) நூலின் ஆசிரியர், அப்புத்தகம் பற்றி விவாதிக்க, நாளை மலாயாப் பல்கலைக்கழகம் வரவுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 28-ல் வெளியீடு கண்ட, முன்னாள் ‘கினிபிஸ்’ எழுத்தாளரும், மலேசியாகினி கட்டுரையாளருமான பி குணசேகரம் எழுதிய அப்புத்தகம், இரண்டாவது முறையாக அச்சீடு கண்டுள்ளது.
உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய, 1எம்டிபி நிதி மோசடி எவ்வாறு வெடித்துச் சிதறியது என்பதை வாசகர்களுக்கு அது தெரிவிக்கிறது.
அதுமட்டுமின்றி, இந்தப் புத்தகம் 1எம்டிபி நிதி மோசடிகளையும், இறுதியில் அது எவ்வாறு 14-வது பொதுத் தேர்தலில் பிஎன் அரசாங்கத்தைச் சரித்தது என்பதனையும் ஆவணப்படுத்தியுள்ளது.
நாளை, காலை மணி 10.30-க்கு, மலாயாப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்துறையின், நான்காவது விரிவுரை மண்டபத்தில் இப்புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது.
அப்புத்தக வெளியீட்டில், நூலாசிரியர் குணசேகரத்தோடு, அரசியல் மற்றும் பொருளாதாரப் பேராசிரியர், தேரன்ஸ் கோமெஸ்-உம் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இந்தப் புத்தகம் பெரும்பாலான புத்தகக் கடைகளில், RM60-க்கு விற்கப்படுகிறது.