ஒற்றுமை அரசாங்கமா? அது முடிந்து விட்டது, ஸாகிட் கூறுகிறார்

அம்னோ ஒற்றுமை அரசாங்கத்தின் ஓர் அங்கமாக வருவது “முடிந்து விட்டது” என்று அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

“இல்லை, இல்லை, ஒற்றுமை அரசாங்க விவகாரம் முடிந்து விட்டது, ஓகே, நான் எனது இறுதி உரையில் கூறியது போல்”, என்று அம்னோ பொதுக்கூட்டம் இன்று முடிவுற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவர் விளக்கவில்லை.

முன்னதாக, அவரது இறுதி உரையில் அம்னோ ஒரு வலுவான எதிரணியாக செயல்படுவதில் கவனம் செலுத்தும் என்று ஸாகிட் கூறினார்.

ஆனால், அம்னோ காத்திருக்கும் அரசாங்கமாகும் சாத்தியத்தியத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், ஏனென்றால் எந்த ஒரு இடைத் தேர்தலிலும் எதுவும் நடக்கலாம் என்று அவர் மேலும் கூறினார்.