சட்டவிரோதமான முறையில் வாகனமோட்டும் லைசென்சுகள் பெற்றவர்கள் அவற்றை சாலைப் போக்குவரத்துத் துறை(ஆர்டிடி)யிடம் ஒப்படைப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் உள்ளன. அதன்பின்னர் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எச்சரித்த போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக் சியு, அவர்களைப் பற்றி முழு விவரம் ஆர்டிடி-யிடம் உள்ளது என்பதையும் நினைவுறுத்தினார்.
“அந்த வகையில் லைசென்ஸ் பெற்றவர்கள் அவற்றை ஆர்டிடி-யிடம் திருப்பிக் கொடுக்க ஒரு மாதகால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது . அதில் இப்போது இரண்டு வாரங்கள்தான் மீதமுள்ளது. அதன்பிறகு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று லொக் நேற்று சிரம்பானில் கூறினார்.