தொடர்பு, பல்லூடக அமைச்சு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்) வழி நடைபெறும் ஏமாற்று வேலைகளை முறியடிக்க போலீசுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று கூறினார்.
அந்த மோசடி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்தும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் போலீசுக்கு உதவியாக அமைச்சு செயல்படும் என்றாரவர்.
“பணம் செலுத்த வேண்டும் என்றும் வங்கிக் கணக்கு எண்களைத் தெரிவிக்குமாறும் கேட்கும் தொலைபேசி அழைப்புகள் விசயத்தில் கவனமாய் இருக்க வேண்டும் ”, என கோபிந்த் டிவிட்டரில் கூறினார்.
இந்த வகை மோசடியை முறியடிக்க ஒரு தனிப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று டிவிட்டர் பயனர் ஒருவர் முன்வைத்த பரிந்துரைக்கு கோபிந்த் எதிர்வினை ஆற்றினார்.
அது ஒரு நல்ல ஆலோசனைதான் என்றாரவர்.