1999-ம் ஆண்டு, துன் டாக்டர் மகாதிர் தனது கையால் எழுதிய, பிஎன் தேர்தல் அறிக்கையை, முன்னாள் தகவல் அமைச்சர் சைனுட்டின் மைடின் இன்று வெளியிட்டார்.
19 ஆண்டுகளாக, அதைப் பத்திரமாக அவர் வைத்திருக்கிறார், மகாதிர் தனக்கு கீழ் உள்ளவர்களை முற்றிலுமாக நம்பி இருப்பவர் அல்ல என்பதற்கு ஆதாரமாக அது அமைந்துள்ளது.
அந்த நேரத்தில் உத்துசான் மெலாயு குழுவின், தலைவராக இருந்த தான், 1999 தேர்தல் அறிக்கை தயாரிப்பு செயலவையில் அங்கத்துவம் பெற்றதாகக் கூறினார்.
“தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்னர், அம்னோ தலைவரான டாக்டர் மகாதிரிடம் அத்தேர்தல் வரைவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தபோது, அவருடைய அறையிலிருந்து அது வெளியே கொண்டுவரப்படவில்லை, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவரது அறைக்கு வெளியே நாங்கள் காத்திருந்தோம், எங்களிடம் அதனைக் கொடுக்கவில்லை.
“திரும்பவும் எங்களிடம் கொடுக்கப்பட்டபோது அது நாங்கள் கொடுத்த அறிக்கையல்ல, டாக்டர் மகாதிர் அவர் கைப்பட எழுதிய 10 பக்கங்கள் கொண்ட பிரதி அது, எங்கள் திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டது அல்ல அது.
“இதற்கு அர்த்தம், ஒரு மாதத்திற்கும் மேலாக, ஒரு நீண்ட விவாதத்திற்குப் பின்னர், நாங்கள் உருவாக்கிய எங்கள் அறிக்கை நிராகரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சட்டிக் சைட் அப்துல் ரஹ்மான், டாக்டர் மகாதிர் தனது உரையை எவ்வளவு துல்லியமாக தயார்செய்து, வழங்குவார் என பகிர்ந்ததைத் தொடர்ந்து, சைனுட்டின் இவ்விஷயத்தை வெளிப்படுத்தினார்.
அவ்வறிக்கை, ஐக்கிய நாட்டு சபையில் மகாதிர் யாரோ எழுதிய உரையை வாசித்தார் – பலரின் பாராட்டைப் பெற்றார் – என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவியதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது.