போர்ட் டிக்சன் அம்னோ தலைவர்கள் கட்சியின் உத்தரவைப் புறக்கணித்து, அங்கு சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் தொகுதித் தலைவர் முகம்மட் ஈசா சமட்டுக்கு வெளிப்படையாக ஆதரவு தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள 53 அம்னோ கிளைகளில் கிட்டத்தட்ட பாதி, ஈசாவுக்காக தேர்தல் பரப்புரை செய்து வருவதாக த மலேசியன் இன்சைட் செய்தித் தளம் கூறியது.
“அம்னோ எங்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விரும்பினால் தாராளமாக எடுக்கட்டும்.
“எவ்வளவோ நன்மைகள் அடைந்துள்ள நாங்கள் ஈசாவைக் கைவிடுவது முறையாகாது”, எனப் பெயர் குறிப்பிடப்படாத ஒரு கிளைத் தலைவர் நேற்றிரவு லிங்கியில் “தகவல் பரிமாற்ற” நிகழ்வில் கூறினார்.
“இன்றிரவு நாங்கள் எங்களின் அம்னோ சட்டையை ‘எடுத்து விட்டோம்’.
“இன்று நாங்கள் அம்னோ அல்ல. சுயேச்சை வேட்பாளருக்கு நாங்கள் தாராளமாக உதவலாம். அம்னோ தேர்தலைப் புறக்கணித்து விட்டது என்பதால் (ஈசாவுக்கு உதவுவதில்) எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை”, என்றாரவர்.