‘திருடினால் குற்றஞ்சாட்டப்படுவீர்கள்’- ரோஸ்மா கைது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்கிறார் மகாதிர்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பழிவாங்கும் நோக்கில் ரோஸ்மா மன்சூர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுவதை மறுத்தார்.

“எல்லாம் சட்டப்படிதான் செய்கிறோம். யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல.

“ஒரு செயல் சட்டவிரோதமாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- அது உறுதி. பழிக்குப்பழி வாங்குதல் என்பதெல்லாம் கிடையாது.

“சட்டம் நீங்கள் பணத்தை எடுத்தாலோ அல்லது திருடினாலோ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுக் குற்றம் சாட்டப்படுவீர்கள் என்கிறது. குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கிறதா இல்லையா என்பது வேறு விசயம்”, என மகாதிர் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரோஸ்மாவின் மகள் நூர்யானா நஜிப் தன் தாயார் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அரசாங்கம் “எல்லைமீறி நடந்து கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்டது குறித்துக் கருத்துரைத்தபோது மகாதிர் அவ்வாறு கூறினார்