மலேசியா நிலையான பொருளாதார வளர்ச்சி கண்டு 2024-இல் உயர்-வருமான நாடாக மாறும்- உலக வங்கி ஆருடம்

மலேசியா பல சவால்களை எதிர்நோக்கினாலும் 2019-இல் 4.7 விழுக்காடும் 2020-இல் 4.6 விழுக்காடும் பொருளாதார வளர்ச்சி கண்டு 2020க்கும் 2024க்குமிடையில் உயர்-வருமானம் பெறும் நாடாக மாறும் என உலக வங்கி கூறுகிறது.

 

2018-இல் மலேசியாவின் பொருளாதாரம் ஒரு மிதமான வளர்ச்சியை 4.9 விழுக்காடு வளர்ச்சியைக் காணும்.

2017-இல் மலேசியப் பொருளாதார வளர்ச்சி 5.9 விழுக்காடாக இருந்தது.

“திறந்தநிலை பொருளாதாரம் என்பதால், புறச் சூழல்களில் ஏற்படும் நிச்சயமற்ற நிலைமைகளால் மலேசியா தொடர்ந்து ஆபத்துகளை எதிர்நோக்கும் நிலையும் இருக்கும்”, என உலக வங்கி இவ்வட்டாரம் மீதான அதன் ஆகக் கடைசி அறிக்கையில் கூறியது.