மோராய்ஸ் கொலை வழக்கு : RM 3.5 மில்லியன் நஜிப் வழங்கினார் எனக் கூறப்படுவது பொய் என்பதைக் குற்றவாளி மறுத்தார்

அரசு துணை வழக்குரைஞர், அந்தோனி கேவின் மோராய்ஸ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7-வது நபர், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், தற்காப்புக்காக தான் வழங்கிய சாட்சியங்கள் அனைத்தும் பொய் என்பதை மறுத்தார்.

குற்றஞ்சாட்டபட்டவர்களில் 6-வது நபரான எஸ் ரவிசந்திரன், 47, தான் செய்வதறியாத நிலையில், யார்யார் மீதோ விரல் சுட்டுவதாகக் – அவ்வழக்கில் வழக்குரைஞர் மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் இராசாக் உட்பட – கூறப்படுவதை மறுத்தார்.

25-வது நாளாக நடந்துவரும் வழக்கு விசாரணையில், இன்று அரசு தரப்பு வழக்குரைஞர், வான் ஷஹாருட்டின் வான் லாடின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ரவிசந்திரன் அவ்வாறு கூறினார்.

சிறைச்சாலை அதிகாரியின் வழி RM3.5 மில்லியன் வழங்கப்பட்டது

ஆர் டினேஸ்வரன், ஏகே தினேஸ்குமார், எம் விஸ்வநாத் மற்றும் எஸ் நிமலன் ஆகிய குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும், டாக்டர் குணசேகரன் மற்றும் தன்னுடைய வேலையாட்கள் என வான் ஷஹாருட்டின் கூறியதையும் ரவிசந்திரன் மறுத்தார்.

முந்தைய விசாரணையின் போது, கெவின் மோராய்ஸைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள, முன்னாள் பிரதமர் RM3.5 மில்லியனை சிறைச்சாலை அதிகாரியின் வழி தனக்கு வழங்கியதாக, ரவிசந்திரன் போலிஸ் புகார் செய்திருப்பதை ஒப்புக்கொண்டார்.

அப்போலிஸ் புகாரில், கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ள, கெவின் மோராய்ஸின் தம்பி, ரிச்சர்ட் மோராய்ஸ், RM2 கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேசமயம் நீதிமன்றத்தில், குற்றத்தை ஒப்புக்கொள்ள டாக்டர் குணசேகரன் RM1.5 கொடுத்ததாக தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ம் தேதி, செந்தூல், ஜாலான் டூத்தாமாஸ் 1-லிருந்து, எண் 1, ஜாலான் யுஎஸ்ஜே 1/6டி, சுபாங்ஜெயா செல்லும் வழியில், காலை 7 மணி முதல் இரவு 8 மணிக்குள், கேவின் மோராய்ஸை கொலை செய்த குற்றத்தை மறுத்து, ஆர் டினேஸ்வரன், ஏகே தினேஸ்குமார், எம் விஸ்வநாத், எஸ் நிமலன், ரவிசந்திரன் மற்றும் டாக்டர் குணசேகரன் ஆகியோர் விசாரணைக் கோரியுள்ளனர். குற்றவியல் தண்டனை 302-ம் பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்படும். 

டினேஸ்வரன், 26, தினேஸ்குமார், 25, விஸ்வநாத், 28, எஸ் நிமலன் மற்றும் ரவிசந்திரனுக்கு ஆதரவாக வழக்குரைஞர் ராஜகோபால் வாதாடும் வேளை, டாக்டர் குணசேகரன், 55, சார்பாக வழக்குரைஞர் சிவநந்தன் ஆஜராகியுள்ளார்.

நீதிபதி அஸ்மான் அப்துல்லா தலைமையில், அடுத்த வழக்கு விசாரணை, அக்டோபர் 26-ம் தேதி தொடரும்.

– பெர்னாமா