கிரேடல் பண்ட் சென். பெர்ஹாட் தலைமை செயல் அதிகாரி நஸ்ரின் ஹசானின் மரணத்தில் புதிய தடயங்கள் கிடைத்துள்ளதை அடுத்து அவரது பிணத்தைத் தோண்டியெடுக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட.
அவ்வுத்தரவைத் தொடர்ந்து போலீஸ் தடயவியல் பிரிவு அதிகாரிகள் பிணத்தைத் தோண்டி எடுப்பதற்கு கோட்டா டமன்சாரா மையத்துக் கொல்லை சென்றுள்ளனர்.
முன்னதாக, காலஞ்சென்ற நஸ்ரினின் உடலைத் தோண்டியெடுப்பதற்கு எதிராக ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற அவரின் இரண்டாவது மனைவி சமிரா முஸாபார் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.
சமிராவின் வழக்குரைஞர் எம்.புரவலன் பிணத்தைத் தோண்டியெடுக்கும்போதும் பிணப் பரிசோதனையின்போதும் நோயியல் மருத்துவர் டாக்டர் பூபிண்டர் சிங்கும் உடனிருப்பதைக் குடும்பத்தார் விரும்புவதாகக் கூறினார்.
அதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.