இன்றைய நிலையில் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் அளிப்பது மிகவும் கடினம்- டயிம்

அரசாங்க ஆலோசகர் டயிம் சைனுடின், தாம் இரண்டு தவணைகள் நிதி அமைச்சராக இருந்த காலத்தோடு ஒப்பிடும்போது இப்போது மலேசியப் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் அளிப்பது மிகவும் சிரமமாகும் என்றார்.

“புத்துயிர் அளிப்பது இப்போது மிகமிகக் கடினம், சிக்கலானதும்கூட. முந்தைய அரசாங்கம்தான் இப்பிரச்னைக்குக் காரணம், பணம் நிறைய விரயமாக்கப்பட்டிருக்கிறது, களவாடப்பட்டிருக்கிறது”, என்றவர் சேனல் நியுஸ் ஏசியா நேர்காணல் ஒன்றில் கூறினார்.

“புள்ளிவிவரங்களை ஆராய்ந்து பிரதமருக்கு அறிக்கை கொடுக்குமாறு எனக்குக் கூறப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்துக்குப் புத்துயிர் அளிக்க சிறிது காலம் பிடிக்கும்”, என்றார்.