பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தேச நிந்தனைச் சட்டம் எப்போது இரத்தாகும் என்பதை அரசாங்கத்தால் துல்லியமாகக் கூற முடியாது என்றார்.
“தேச நிந்தனைச் சட்டம் அப்படியேதான் உள்ளது. அச்சட்டத்தை அகற்ற நாளாகும். அதற்கிடையில் போலீஸ் அடிக்கடி அதைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
“அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை. அதற்காக யாரும் என்னைக் குறை சொல்ல விரும்பினால் தாராளமாகச் சொல்லிக் கொள்ளட்டும்”, என மகாதிர் கோலாலும்பூரில் நூல் வெளியீடு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசமைப்புடன் தொடர்புகொண்ட சட்டங்களை நீக்க மக்களையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் என்றாரவர்.