ஸாகிட் எம்எசிசிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளார்

 

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியை வரும் புதன்கிழமை புத்ரா ஜெயா எம்எசிசி தலைமையகத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

காலை மணி 10-க்கு அங்கு வருமாறு அவருக்கு கூறப்பட்டுள்ளதாக மலேசியாகினிக்கு தெரியவந்துள்ளது. இது எம்எசிசியுடன் அவரது மூன்றாவது சந்திப்பாகும்.

கடந்த ஜூலையில் ஸாகிட் இரண்டு தடவை விசாரிக்கப்பட்டார். யாயாசான் அக்கல் புடி அறவாரியத்தின் நிதியை தமது கடன் அட்டை கடனைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தியது மற்றும் ரிம2.6 பில்லியனை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தியதாக கூறிக்கொண்ட சவூதி அரேபிய அரச குடும்ப உறுப்பினரின் பிரதிநிதிகளைச் சந்தித்ததாக அவர் கூறிக்கொண்டது பற்றியும் ஸாகிட் விசாரிக்கப்பட்டார்.

இந்த ரிம2.6 பில்லியன் 1எம்டிபியிலிருந்து வந்ததாக புலன்விசாரணையாளர்கள், அமெரிக்க நீதித்துறை (டிஒஜெ) உட்பட), கூறுகின்றனர்.

இதனிடையே, ஸாகிட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எம்எசிசியின் தலைமையகத்திற்கு வெளியில் கூடுமாறு ஆதரவாளர்களை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் கேட்டுக்கொண்டுள்ளார்.