அரசாங்கம் அதன் கடன்களைக் கட்டி முடிக்கவும் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைகளைக் கொடுத்து முடிக்கவும் “குறைந்தது” மூன்றாண்டுகள் பிடிக்கும் என நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று கூறினார்.
“ ரிம1 ட்ரில்லியன் கடன் பிரச்னையைத் தீர்க்கவும் திருப்பிக் செலுத்தப்பட வேண்டிய ரிம35பில்லியன் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கும் குறைந்தது மூன்றாண்டுகள் ஆகலாம்”, என்று லிம் குறிப்பிட்டார். நிதி அமைச்சர் இன்று கோலாலும்பூரில் “மலேசியா: ஒரு புதிய விடியல்” என்ற கருத்தரங்கில் முதலீட்டாளர்களிடம் பேசினார்.
ரிம 35 பில்லியன் என்பது நிறுவனங்களுக்கு அரசாங்கம் திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையான ரிம19 பில்லியனையும் வருமான வரியான ரிம16பில்லியனையும் சேர்த்தால் வரும் தொகையாகும்.
அதைத் திருப்பிக் கொடுத்தல் “வலிமிக்கதுதான்” என்பதை ஒப்புக்கொண்ட லிம், கொடுபடாமலிருக்கும் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய பணம் உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்படும் என்று உறுதியளித்தார்.