லாபுவான் எம்பி அம்னோவிலிருந்து வெளியேறுவதை உறுதிபடுத்தினார்

 

லாபுவான் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸ்மான் ஒஸ்லி அக்கட்சியிலிருந்து வெளியேறி பார்டி வார்சான் சாபாவில் சேரப் போவதாக உலவிய வதந்தியை உறுதிப்படுத்தினார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம் வாரிசான் தலைமையிலான சாபா அரசாங்கத்துடனான உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் லாபுவான் கூட்டரசு பிரதேசத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட சிந்தனைக்குப் பிறகும் பல்வேறு கட்சிகளின் கருத்துகளைச் செவிமடுத்த பிறகும், லாபுவான் மற்றும் லாபுவான் மக்களின் எதிர்காலத்திற்காகவும் தாம் வாரிசானில் நுழையும் தமது முடிவை இன்று அறிவிப்பதாக ரோஸ்மான் கூறினார்.

தமது இந்த முடிவு லாபுவானுக்கும் சாபாவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு நெருங்கிய மற்றும் பலனளிக்கும் உறவுகளுக்கான ஒரு புதிய கட்டமாக இருக்கும் என்று தாம் நம்புவதாக ரோஸ்மான் மேலும் கூறினார்.

அம்னோவிலிருந்து ரோஸ்மானின் வெளியேறல் நாடாளுமன்றத்தில் அம்னோவின் மொத்த இருக்கைகளை 48-க்கு குறைத்து விடும். அதன் விளைவாக அம்னோ இனிமேலும் மக்களவையில் மிகப் பெரிய கட்சியாக இருக்காது.