மலேசியா சீனாவின் கோரிக்கையை ஏற்காமல் உய்கோர் கைதிகளை விடுவித்தது

மலேசியா கடந்த ஆண்டு தடுத்து வைத்த தாய்லாந்திலிருந்து தப்பியோடி வந்த உய்கோர் முஸ்லிம்கள் 11 பேரை விடுவித்து துருக்கிக்கு அனுப்பி வைத்ததாக அவர்களின் வழக்குரைஞர் நேற்றுத் தெரிவித்தார். அவர்களை பெய்ஜிங் அனுப்பி வைக்குமாறு சீனா கேட்டுக்கொண்டதை மலேசியா பொருட்படுத்தவில்லை.

இதனால் சீனாவுடனான உறவுகள் நலிவடையலாம். சீன -மலேசிய உறவுகள் டாக்டர் மகாதிர் முகம்மட் சீன நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த யுஎஸ்$20 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள குத்தகைகளை இரத்துச் செய்ததிலிருந்து அவ்வளவு நன்றாக இல்லை.

மலேசியா உய்கோர் தடுப்புக் கைதிகள்மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டதை அடுத்து அவர்கள் செவ்வாய்க்கிழமை கோலாலும்பூரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை துருக்கி சென்றடைந்தனர் என அவர்களின் வழக்குரைஞர் ஃபாஹ்மி மொய்ன் கூறினார்.