நஜிப்பின் உதவியாளார் செய்த புகாரை போலீஸ் விசாரிக்காது 

 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் உதவியாளர் பல பிரபல்யமான கொலைகள் பற்றி லிம் கிட் சியாங் கூறியிருந்தது மீது செய்திருந்த போலீஸ் புகார் சம்பந்தமாக போலீஸ் விசாரணை எதையும் மேற்கொள்ளாது.

“விசாரிப்பதற்கு எதுவும் கிடையாது” என்று செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். சண்முகமூர்த்தி சின்னையா மலேசியாகினியிடம் கூறினார்.

அந்த விவகாரம் ஒரு சிவில் நடவடிக்கை என்று வகை செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அது மஜிஸ்டிரேட்டுக்கு அனுப்பப்படும் என்றாரவர்.

“லிம் கூறியிருப்பதற்கு எதிராக நஜிப் தம்மை தற்காத்துக் கொள்ள விரும்புகிறார். அதில் விசாரிப்பதற்கு ஒன்றுமில்லை. அது அவதூறு வழக்கு போன்றதாகும், ஆனால் அதை நாங்கள் விசாரிக்க மாட்டோம்…சிவில் நடவடிக்கை வேண்டுமானால் எடுக்கலாம்”, என்று அவர் மேலும் கூறினார்.

நஜீபின் உதவியாளர் நேற்று ஶ்ரீ ஹர்தாமஸ் போலீஸ் நிலையத்தில் செய்திருந்த புகாரை மலேசியாகினி கண்டது.

மலேசியாகினி வெளியிட்டிருந்த அந்தக் கட்டுரையில் தாம் பிரதமராக இருந்தால் அல்தான்துயா, கெவின் மொராஸ், ஹுசேன் நாஜாடி, தியோ பெங் ஹோக் ஆகியோரின் மரணங்கள் குறித்து விசாரணையை மீண்டும் தொடங்குவேன் என்று லிம் கிட் சியாங் கூறியிருந்தது மீது போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று நஜிப்பின் உதவியாளர் வலியுறுத்தியிருந்தார்.