பிடி நாடாளுமன்ற இடைத் தேர்தல் வாக்களிப்பு இன்று மாலை மணி 5.30 க்கு முடிவுற்றது.
இந்த இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் அம்னோ உறுப்பினர் முகம்ட் ஈசா, அன்வாரின் முன்னாள் உதவியாளர் முகம்ட் சைபுல், பாஸின் முகமட் நாஸாரி மொக்தார், சுயேட்சை வேப்பாளர்கள் ஸ்டெவி சான். லவ் செக் யான் மற்றும் கான் சீ யுஎன் ஆகியோர் போட்டியிட்டனர்.
பிகேஆர் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டான்யால் பாலகோபால் அப்துல்லா தமது இருக்கையை அன்வார் தீவிர அரசியல் ஈடுபடுவதற்கு ஏதுவாக காலி செய்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் டான்யால் இத்தொகுதியிலிருந்து 17,710 வாக்குகள் பெரும்பான்மையில், அல்லது 59 விழுக்காடு வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார்.