நாடாளுமன்றம் | இன்று, போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராக அன்வார் இப்ராஹிம் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இன்று காலை, நாடாளுமன்றத்தில், 10.04 மணியளவில், சபாநாயகர் முகமட் அரிஃப் முகமட் யுசோஃப் முன்னிலையில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இது வாய்மொழி கேள்வி அமர்வுக்கு முன்னர், இன்றையக் கூட்டத்தின் முதல் ஏற்பாடு ஆகும்.
நிகழ்ச்சியில், அவரது பெயரைச் சத்தியப்பிரமாணத்திற்காக அழைத்தபோதும், இறுதியிலும் கூடியிருந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.