புதிய வரிகள் குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 2-இல், நிதி அமைச்சர் லிம் குவான் எங் 2019 பட்ஜெட்டை அறிவிக்கும்வரை காத்திருக்க வேண்டும்.
இன்று நாடாளுமன்றத்தில் இஸ்மாயில் சப்ரி யாக்கூப்( பிஎன் -பெரா) புதிய வரிகள் குறைந்த வருமானம் பெறுவோரை எப்படிப் பாதிக்கும் என்று வினவியதற்கு லிம் அவ்வாறு கூறினார்.
“புது வரிகள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால் இன்னும் இரண்டு வாரங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்வரை பொறுத்திருக்க வேண்டும்”, என்றாரவர். .