வாக்குறுதிகள் பற்றிய குறைகூரல்களுக்கு எதிராக அன்வார் அரசாங்கத்தைத் தற்காத்தார்

 

பக்கத்தான் ஹரப்பான் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது பற்றிய குறைகூரல்கள் மீது கருத்து தெரிவித்த பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அமைப்புகள் சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரச்சனைகளைச் சீர்திருத்துவதற்கு அரசாங்கம் அதன் பங்கை ஆற்றியுள்ளது என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

இன்றி நாடாளுமன்றத்தில், போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அன்வார், வாக்குறுதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆழ்ந்து சிந்தித்து ஆராயந்து முடிவெடுக்கப்பட்டவையாகும். தாம் சிறையிலிருந்ததால் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்ததாக அவர் கூறினார்.

இந்த வாக்குறுதியின் முக்கிய கூறுகள் முந்தைய பக்கத்தான் ரக்யாட்டின் வாக்குறுதிகளிலிருந்து எடுக்கப்பட்டதாகும் என்று அவர் மேலும் கூறினார்.

ஒளிமறைவற்ற உண்மையான நிலவரம் நாம் தற்போதைய சூழ்நிலையை மீண்டும் பார்த்து மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கோருகிறது என்றாவர்.

மக்கள் அரசாங்கத்தின் மீது முற்றிலும் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையல்ல, ஏனென்றால் இதர வாக்குறுதிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளத்தை அவர்கள் காண முடியும்.

“முக்கியமான பிரச்சனைகள் என்ன? ஆட்சிமுறை பிரச்சனை, ஊழல்-எதிர்ப்பு பிரச்சனை, அதிகாரத் துஷ்பிரயோகம்…

“எனக்கு அவைதான் இந்த அரசாங்கம் நிலைநிறுத்த வேண்டிய முக்கியமானப் பிரச்சனைகள்”, என்று அன்வார் மேலும் கூறினார்.