பிகேஆர் கட்சித் தேர்தலில் பண அரசியல் கவலை அளிக்கிறது- ரபிசி

பிகேஆர் கட்சித் தேர்தலில் பண அரசியல் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்போரை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று அதன் உதவித் தலைவர் ரபிசி ரம்லி வலியுறுத்தினார். பண அரசியல்தான் அம்னோவின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை மறந்து விடக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“இப்போது பண அரசியல் நமக்கும் ஒரு சோதனையாக அமையப் போகிறது. ஏனென்றால் நாம் ஆட்சிக்கு வந்திருப்பதால் பல தரப்புகள் ஆளும் கட்சிமீது ஆர்வம் காட்டுவார்கள்.

“பண அரசியல் கலாச்சாரத்தை நிராகரிக்குமாறு இளம் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பணம் கொடுப்போரைப் புறந்தள்ளி நியாயமானவர்களை, அடிநிலை உறுப்பினர்களுக்காகப் போராடுவோரையே தேர்ந்தெடுக்க வேண்டும்”, என ரபிசி கூறியதாக பெர்னாமா செய்தி அறிவிக்கிறது.

ரபிசி பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு நடப்புத் துணைத் தலைவரும் பொருளாதார அமைச்சருமான அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிட்டுகிறார்.