பிகேஆரில் பண அரசியலா? கட்சி ஆராயும்- வான் அசிசா

பிகேஆர் தலைவர் பதவியிலிருந்து வெளியேறும் வான் அசிசா வான் இஸ்மாயில், கட்சித் தேர்தலில் பண அரசியல் விளையாடுவதாக ரபிசி ரம்லி கூறியிருப்பதை மத்திய செயல் குழு விசாரிக்கும் என்றார்.

ரபிசி கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குத் தற்போது அப்பதவியில் உள்ள முகம்மட் அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

“நீங்கள் சொல்லி விட்டீர்கள். அதை ஆராய்வோம்”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நேற்று ரபிசி பேசுகையில், பிகேஆர் தேர்தலில் பெருகிவரும் பண அரசியல் கவலை அளிப்பதாகக் கூறியிருந்தார்.