கட்சித்தாவல் தடுப்புச் சட்டம்? இப்போதைக்கு இல்லை- அமைச்சர்

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதைத் தடுக்கும் சட்டத்தைக் கொண்டுவரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுய் கியோங் கூறினார்.

“தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, நாட்டு மக்களுக்குக் குழுமச் சுதந்திரம் உண்டு என நினைக்கிறது.

“அது கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்பவும் உள்ளது”, என லியு நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக வழங்கிய பதிலில் கூறினார்.

1992-இல் நோர்டின் சாலே வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நோர்டின் பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர். அவர் பாஸிலிருந்து அம்னோவுக்குத் தாவினார்.

அதற்கெதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. கூட்டரசி நீதிமன்றம் அதன் தீர்ப்பில், பாஸ் கொண்டு வந்த கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் குழுமச் சுதந்திரத்தை ( ஒருவர் எதில் சேர விரும்புகிறாரோ அதற்கு அவருக்குள்ள உரிமை) வழங்கும் அரசமைப்பு 10-ஆம் பிரிவுக்கு எதிரானது என்று கூறியது.