நஜிப், ரோஸ்மாவுக்கு எதிராக ரிம52.6 மில்லியன் கோரி தீபக் வழக்கு தொடர்ந்துள்ளார்

 

கம்பள வணிகர் தீபக் ஜெய்க்கிஷன், அவரது சகோதரர் ராஜெஷ் ஜெய்க்கிஷன் மற்றும் அவர்களது நிறுவனம் ரேடியண்ட் ஸ்பெலன்டர் சென். பெர்ஹாட் முன்னாள் பிரதமர் நஜிர் ரசாக் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூர் ஆகியோருக்கு எதிராக ரிம52.6 மில்லியன் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

நஜிப் மற்றும் ரோஸ்மாவை பிரதிநிதிக்க வழக்குரைஞர் டேவிட் மேத்தியூஸை அவர்கள் நியமித்துள்ளனர்.

கடந்த மாதம், இந்த வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். நந்த பாலன் முன் விசாரணைக்கு வந்த போது நஜிப்பு ரோஸ்மாவும் அவர்களுடைய வழக்குரைஞரை நியமிக்காமல் இருந்தனர்.

நஜிப் மற்றும் ரோஸ்மாவின் வழக்குரைஞராக மேத்தியூஸ் நியமிக்கப்பட்டிருப்பதை தீபக்கின் வழக்குரைஞர் முகமட் ஹனிப் ஹாடிரி அப்துல்லா உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தினார்.