அரசாங்கம் தொடர்ந்து அம்னோ தலைவர்களைச் சிறுமைப்படுத்த முயன்று வந்திருக்கிறதாம். அந்த அடிப்படையில்தான் நாளை கட்சித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடிமீது குற்றஞ்சாட்டத் திட்டமிட்டிருக்கிறதாம். அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.
“அது ஜாஹிட்டை நம்பத்தகாதவர் என்றும் தகுதியற்ற தலைவர் என்று காண்பிக்கும் ஒரு முயற்சி. ஆனால், அவர் நாட்டுக்கு நிறைய பாடுபட்டிருப்பதை மக்கள் அறிவர்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
ஜெலுபு எம்பியான ஜலாலுடின், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீதும் பாலிங் எம்பி அப்துல் அசீஸ் அப்துல் ரகிம்மீதும் வழக்கு தொடுக்கப்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை ஜாஹிட்மீது குற்றஞ்சாட்டத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
புத்ரா ஜெயா பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.