தேர்தல் ஆணைய(இசி)த்தின் ஐந்து உறுப்பினர்களின் பணிக் காலம் குறைக்கப்பட்டு அவர்கள் 2019 ஜனவரி முதல் நாள் பதவி விலகுவர்.
துணைத் தலைமை ஆணையர் ஒத்மான் மஹ்மூட், உறுப்பினர்கள் முகம்மட் யூசுப் மன்சூர், அப்துல் அசீஸ் காலிடின், சுலைமான் நராவி, லியோ சொங் சியோங் ஆகியோரை அந்த ஐவருமாவர்.
ஆணையர் கே.பாலசிங்கத்தின் பணிக்காலம் குறைக்கப்படவில்லை.
இம்முடிவு அக்டோபர் 15-இல் நடந்த இசி ஆணையர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இசி தலைவர் அஸ்ஹார் ஹருன் கூறினார்.
பணிக்காலம் குறைக்கப்படாதிருந்தால் அந்த ஐந்து ஆணையர்களும் 66வயதுவரை பணியில் இருந்திருப்பர்.
முந்தைய இசி தலைவர் ஹாஷிம் அப்துல்லா தம் பணிக்காலத்தைக் குறைத்துக்கொண்டு ஜூலை முதல் தேதி பதவி விலகினார்.