நஜிப் இன்று மீண்டும் எம்எசிசியால் விசாரிக்கப்பட்டார்

 

1எம்டிபி வழக்குகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று ஆறாவது முறையாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மென்ட் கம்பனிக்கு 1எம்டிபி கட்ட வேண்டிய கடன் தொகை குறித்து நஜிப்பின் வாக்குமூலம் பதிவி செய்யப்படுவதற்காக அவர் அழைக்கப்பட்டார் என்று விசாரனைக்கு நெருக்கமான வட்டாரம் மலேசியாகினியிடம் கூறிற்று.

1எம்டிபி வழக்கு விசாரணையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து அவர் மீண்டும் இன்று அழைக்கப்பட்டார் என்று அந்த வட்டாரம் கூறிற்று.

காலை மணி 10-க்கு எம்எசிசி தலைமையகத்திற்கு வந்த சேர்ந்த நஜிப் அங்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் இருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை, நஜிப் எம்எசிசியால் கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்திற்கு விசாரிக்கப்பட்டார்.