அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி இலஞ்சம் மற்றும் பணச் சலவை ஆகியவற்றுக்காக இன்று எம்எசிசியால் கைது செய்யப்பட்டார். நாளை அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரத் துஷ்பிரயோகம், கிரிமினல் நம்பிக்கை மோசடி மற்றும் பணச் சலவை ஆகியவற்றுக்காக முன்னாள் துணைப் பிரதமர் விசாரிக்கப்படுகிறார் என்று அந்த ஆணையம் கூறியது.
சட்டத் துறை அலுவலகம் அக்குற்றச்சாட்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
புத்ரா ஜெயா, எம்எசிசி தலைமையகத்தில் ஸாகிட் பிற்பகல் மணி 3.15-க்கு கைது செய்யப்பட்டார்.