எம்ஏசிசி தடுப்புக் காவலில் இருந்து, ஜாமினில் வெளிவர ஜாஹிட் மறுப்பு

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) ஜாமின் மனுவை வழங்க தனது வழக்குரைஞர்கள் செய்த பரிந்துரையை, அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நிராகரித்தார்.

இன்று, எம்ஏசிசி தலைமையகத்தில், பத்திரிக்கையாளர்களிடம் இத்தகவலை அவரின் மனைவி ஹமிடா காமிஸ் தெரிவித்தார்.

“வழக்குரைஞர்கள் அவரை வெளியாக்க முயற்சித்தனர், ஆனால் அவர் அதனை விரும்பவில்லை. நாளை காலை வரை இங்கேயே இருந்து, நேராக கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு அவர் கொண்டுச் செல்லப்படுவார்,” என ஹமிடா தெரிவித்தார்.

முன்பு இசா சட்டத்தில், ஜாஹிட் 10 நாட்கள் சிறையில் இருந்தார்

அவரின் மனநிலைக் குறித்து கேட்டபோது, “நான் ஒகே,” என ஹமீடா பதிலளித்தார்.

“முன்பு, அவர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவராக இருந்தபோது, இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 10 நாட்கள் சிறையில் இருந்தார்,” என ஹமிடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

1998-ல், மகாதிர் அன்வார் இப்ராஹிமைத் துணைப் பிரதமர் பதவிலிருந்து விலக்கிய ஒருசில வாரங்களில், ஜாஹிட் இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அப்போது, ஜாஹிட் அன்வாரின் தீவிர ஆதரவாளர்.