மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின், பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் டத்தோ விருதுகளைப் பெறுவதைக் கட்டுப்படுத்த சில விதிமுறைகளை அறிமுகப்படுத்துவது நல்லது என்கிறார்.
டிஏபி, அதன் கட்சியினர் பணியில் இருக்கும்போது விருதுகளை வாங்கிக்கொள்ளக் கூடாது பணிக்காலம் முடிந்த பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறது. பக்கத்தான் ஹரப்பானின் மற்ற கட்சிகளிடம் அப்படிப்பட்ட விதிமுறை கிடையாது.
“மலாக்கா அரசிடமிருந்து ’புத்தம்புது அமைச்சர்கள்’ விருது பெற்றுக் கொண்டது குறித்து ஏற்கனவே கருத்துச் சொல்லியிருக்கிறேன். அது முதிர்ச்சியற்ற சிந்தனையைக் காண்பிக்கிறது.
“அதுபோல் மீண்டும் நடவாதிருக்க அமைச்சர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பணியில் இருக்கும் காலத்தில் விருது பெறுவதற்குத் தடை விதிக்கும் விதிமுறைகளை ஹரப்பான் கொண்டு வரலாம்..
“அதே போன்ற விதிமுறைகளை எம்பிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொண்டுவருவது மேலும் நன்று”, என காடிர் அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.