பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார்கள் ஆகியோரின் பணி இரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் என்று வரையறுப்பது மக்களுக்கும் மாநிலங்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் பரிந்துரை என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.
பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார்கள் மாறுவதால் மக்களுக்குப் புதிய மேம்பாட்டுச் சிந்தனைகள், வியூகங்கள் போன்றவை கிடைக்கும் என மலாயாப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் இணைப் பேராசிரியர் டாக்டர் ஆவாங் அஸ்மான் கூறினார்.
நேற்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசியல் முறையைச் சீரமைக்க பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார்கள் ஆகிய பதவிகள் இரண்டு தவணைகளுக்கு மட்டுமே என்று வரையறுக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார்.
“இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இரண்டு தவணைகள் என்ற கொள்கை நடப்பில் உள்ளது”, என்று ஆவாங் அஸ்மான் கூறினார். இரண்டு தவணைகளுக்கு மட்டுமே பதவி என்று வரையறுப்பது தலைவர்களிடம் அதிகாரம் குவிவதைத் தடுக்கும் .
அதிகாரம் குவிவது சர்வாதிகார அரசு உருவாக வழிகோலும் என்றவர் சொன்னார்.